Close
ஏப்ரல் 3, 2025 11:47 மணி

சத்தியமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பலி

சத்தியமங்கலம்

மீன்பிடிக்கச்சென்ற பெண் நீரில் மூழ்கி பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பலியானார்.

கடத்தூர் மாக்கினாங் கோம்பை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி (43).  இவர் அரியப்பம் பாளையம் செக் டேம் அருகில் மல்லிகா என்பவரும் சேர்ந்து பரிசில் மூலம் மீன் பிடிப்பதை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கம்போல் இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது  சம்பவ இடத்தில் பரிசல் செக் டேமை கடந்து செல்ல ஆரோக்கியமேரி பரிசலில் ஏற முயற்சிக்கும் பொழுது ஆரோக்கிய மேரி தவறி விழுந்து சுழலில் சிக்கி கொண்டார்.

பரிசல் அவர் மேல் கவிழ்ந்து விட உடன் வந்த மல்லிகா கூச்சலிட்டதைக் கேட்ட  அருகிலிருந்த  இருவர் ஓடி வந்து காப்பாற்ற முயற்சி செய்தும் ஆரோக்கிய மேரி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

போலீஸார் சம்பவ இடம் வந்து வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top