தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி அருண் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் அரசால் வழங்கப்படும் பொது விநியோக திட்ட ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் மற்றும் கலப்பட டீசல் கடத்துதல் மற்றும் பதுக்குவது சம்பந்தமாக கடுமை யான நடவடிக்கை எடுத்து கட்டுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்பேரில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கே. புதுப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, அவ்வழியே மொபட்டில் வந்த நம்பூரணி பட்டி அடைக்கலம் மகன் பாண்டியன் ( 40 ) என்பவர் கடத்தி வந்த சுமார் 100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்