Close
மே 23, 2025 4:47 மணி

பொன்னமராவதி அருகே இரட்டைக் கொலை.. குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

புதுக்கோட்டை

இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த புதுக்கோட்டை போலீஸாரை பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபு. உடன் எஸ்பி வந்திதாபாண்டே

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் இரட்டை கொலையாளிகளை பிடித்த காவலர்களைதமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்து  பாராட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிஅருகே உள்ள வேந்தன்பட்டியை சேர்ந்த பழனியப்பன் ( 54) என்பவரும் அவரது தாயார் சிகப்பி ( 75) என்பவரும் கடந்த 23.12.2022 அன்று அவரது வீட்டில் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப் பட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை யாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.இந்நிலையில் 02.05.2023 அன்று தனிப்படை போலீசார் சக்திவேல் ( 33) மற்றும் அலெக்சாண்டர் ( 36) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், நகைக்காக அந்தக் கொலைகள் செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் தனிப்படை போலீசாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு  நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்து பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top