Close
செப்டம்பர் 20, 2024 5:49 காலை

சென்னையில் கடத்தப்பட்ட   மதுரையைச் சேர்ந்த ராப் பாடகர்… புதுக்கோட்டையில் மீட்பு

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட மதுரை பாப் பாடகர் தேவ் ஆனந்த்

சென்னையில் கடத்தப்பட்ட   மதுரையைச் சேர்ந்த ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் போராட்டத்தில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் போலீஸாரால்  நேற்று மீட்கப்பட்டார்.

மதுரை சேர்ந்த ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த்(24), இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு திரும்பியபோது மேலப்பன்சாவடியில்  பகுதியில் காரில் வந்த மர்ம நபர்களால் கத்தி முனையில் தேவ் ஆனந்த் கடத்தப்பட்டார்.

இது குறித்து அவரது  நண்பர்கள் அளித்த புகார் அடிப்படையில்,  அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் போலீசார் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை போலீஸார் தடுத்து சோதனை நடத்தியதில் தேவ் ஆனந்த் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

புதுக்கோட்டை

அவரை  உடனடியாக மீட்ட போலீசார், கடத்தல் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர், முத்துப்பாண்டி, முத்து,  சென்னையைச் சேர்ந்த கருப்பசாமி காஞ்சிபுரம் மாவட்டம், மாடப்பாக்கம் கூடுவாஞ்சேரியை சுவாமிநாதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில்  தேவ் ஆனந்தின் சகோதரர்  சிரஞ்சீவி தொழில் நிமித்தமாக இரண்டு பேரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், இதற்காக அவர் கடத்தப்பட்ட தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் சென்னையில் கடத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top