திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் சப்தகிரி நகரில் வசித்து வரும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சுந்தரமூர்த்தி தனது குடும்பத்துடன் டிசம்பர் 29.ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார் அன்று இரவு இவரது வீட்டை உடைத்து 25 சவரன் நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடர்கள் திருடிச் சென்று இருந்தனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
திருத்தணி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் கைரேகை மூலம் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அருங்குளம் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, திருவள்ளூரில் இருந்து திருப்பதி வந்த பேருந்தில் போலீசார் சோதனை மேற் கொண்டனர். அப்போது இரண்டுபேர் பேருந்தை விட்டு இறங்கி ஓடி தப்பிக்க முயன்றனர். அவர்களை வளைத்துப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருத்தணி சப்தகிரி நகரில் மெடிக்கல் ஷாப் சுந்தரமூர்த்தி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 25 சவரன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை வியாசர்பாடி சேர்ந்த சதீஷ்,சென்னை அம்பத்தூர் சேர்ந்த பொன் முருகன் ஆகியோர் என்பது தெரிவந்தது.
அவர்கள் இருவர் மீதும் சென்னை, செங்கல்பட்டு, ஆவடி, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பலே திருடர்கள் ஆவார்கள். அவர்களை பிடித்த திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.