Close
ஜனவரி 11, 2025 10:47 காலை

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில்  நடைபெற்ற விழாவில் பார்வை யற்றோர் சங்க  உறுப்பினர்களுடன் அறம் லயன்ஸ் சங்கத்தினர் பொங்கலிட்டு புத்தாடைகள் வழங்கினர்.

விழாவுக்கு, அறம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர் மற்றும் வட்டாரத் தலைவருமான அரவிந்த் தலைமை வகித்தார்.

 துணை தலைவர் எம். பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை வட்டாட்சியர் இ. பரணி கலந்து கொண்டு பார்வையற்றோர் சங்க உறுப்பினர்கள்  100 பேருக்கு  பொங்கல் புத்தாடைகள் வழங்கி வாழ்த்தினார்.

புதுக்கோட்டை
பொங்கல் புத்தாடை வழங்கிய புதுக்கோட்டை வட்டாட்சியர் இ. பரணி.

இந்நிகழ்வில் செயலாளர் ஜி. சந்திரசேகர், பொருளாளர் கே. ஜெய்சங்கர் உட்பட சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் உச்சாணி ஆர். சக்திவேல் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top