Close
செப்டம்பர் 20, 2024 6:53 காலை

திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்ற பார் உரிமையாளர் கைது

சென்னை

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சென்னை திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்து வந்த பார் உரிமையாளர் ஜோஸ்வா (50) என்பவரை செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் சிறப்பு படை போலீஸார் கைது செய்து புதன்கிழமை திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர்.

திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் ஜீவன்லால் நகர் எதிரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடம் உள்ளது.  இதனை டி.எஸ்.கோபால் நகரைச் சேர்ந்த ஜோஸ்வா என்பவர் நடத்தி வருகிறார்.  இங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை காவலர்கள் மதுபான கடையில் சில தினங்களுக்கு முன்பு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சுரேந்தர்  என்பவர் துண்டு சீட்டுகளை வைத்து செல்போன் மூலமாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.  தமிழகத் தில் லாட்டரி சீட்டு முழுவதுமாக தடை செய்யப்பட் டுள்ள நிலையில் கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டை மூலதன மாகக் கொண்டு தமிழகத்தில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்க ளை தொடர்ந்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.  இதனையடுத்து சுரேந்தரை கைது செய்த போலீஸார் தலைமறைவான பார் உரிமையாளரான ஜோஸ்வா என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜோஸ்வா பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் முகமது இர்ஃபான் தலைமையிலான தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு  கைது செய்தனர்.

இதனையடுத்து  திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்த போலீஸார் அவரை 15  நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஜோஸ்வா.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ரவிசங்கர் மற்றும் லாட்டரி சீட்டு உரிமையாளர் மணி ஆகியோரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top