Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது… புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேர் தேர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்

ஆசிரியர் தினமான செப். 5  -ல்,  தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1.  க. முத்துராமலிங்கம்,உடற்கல்வி ஆசிரியர்,
ஸம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல்
உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

2.   வீ. இளங்கோவன், தலைமை ஆசிரியர்,
அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி,
எண்ணை, புதுக்கோட்டை மாவட்டம்.

3.  அ. வின்சென்ட்,  தலைமை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி, காவேரிநகர்,
புதுக்கோட்டை மாவட்டம்.

4.   கோ. பா. இராஜகோபால், முதுகலை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி, தாஞ்சூர்,புதுக்கோட்டை மாவட்டம்.

5.  சு. புகாரி, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
சூரியூர்,  புதுக்கோட்டை மாவட்டம்.

6.  ஶ்ரீ. பாஸ்கரன், பட்டதாரி ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  ஆவணத்தாங்கோட்டை,
அறந்தாங்கி ஒன்றியம்,புதுக்கோட்டை மாவட்டம்.

7.சீ. வாசுகி,  தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேலஸ்தானம், மணமேல்குடி ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

8. க. சா. வீர. சாத்தப்பன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பூனையன் குடியிருப்பு,
அரிமழம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.

9.  சி. சதிஷ்குமார்,  இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்பனைக்காடு கிழக்கு, அறந்தாங்கி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.

10. த. பவானி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அன்னச்சத்திரம்,புதுக்கோட்டை ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.

11.  ந. குமார், நடன ஆசிரியர்,வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இராஜகோபாலபுரம்,  புதுக்கோட்டை மாவட்டம் ஆகியோர்  விருது பெறுகின்றனர்.

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள சதிஷ்குமார் கூறியதாவது: அரசுப்பள்ளியில் ஓர் ஆசிரியராகப் பயணிக்கத் தொடங்கிய 18 ஆண்டுகளில் எனக்கான பயணம்என்பதை, நான் கற்ற கல்வி இந்த சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்கிற நோக்கத்திலேயே பயணித்து வருகின்றேன். என்ன செய்திருக்கின்றேன் என்பதை விட,
இன்னும் என்ன செய்ய வேண்டும் என்னும் தெளிவுடனே
பயணிக்கின்றேன்.

புதுக்கோட்டை

என் பயணத்திற்கு பக்க பலமாய் இருப்பது விருதுகள் மட்டுமல்ல, விமர்சனங்களும்தான்.கற்பித்துக் கொண்டே இருக்கும்  உலகில் இன்னும் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவ ராக வருங்காலத் தலைமுறை யை வளப்படுத்தும் ஓர் ஆசிரியராக எதை அடையாளப்படுத்த வேண்டும் என்னும் தெளிந்த, துணிந்த ஓர் எழுத்தாளராக

எங்கெல்லாம் வெளிச்சம் தேவைப்படுகின்றதோ அங்கெல்லாம் ஒரு பயிற்றுநராக வாசிக்கின்ற ஒவ்வொரு வருக்குள்ளும்ஏதோ ஒன்றை விதைத்து விடமுடியுமென நம்பும் ஒரு கவிஞராகஉள்ளம் தெளிவுற்றால்உயர்வுதானே வரும் எனச் சொல்லும்ஓர் உளவியல் ஆலோசகராக சக மனிதனின்வளர்ச்சியில் மகிழ்வுறும் சக மனிதனாக என் பயணம் தொடரும் என்றார்.

க. முத்துராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்,ஸம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல்உயர்நிலைப் பள்ளி.

புதுக்கோட்டைவிருதுக்குப்பெருமை: 24 மணி நேரமும் கல்விக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் உன்னத மனித நேய மாண்பாளர் குருதிக் கொடையாளர்  ஆசிரியர் முத்துராமலிங்கம். இவரால் விருது பெருமை பெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top