Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி

புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ர பேரிடர் விழிப்புணர்வு முகாம்

மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை இணைந்து பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு உத்தரவின் படி, பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் ஆலோசனையின் பேரில், மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாமுக்கு கிராம நிர்வாக அலுவலர் விஜயா தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில்,  இயற்கை பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வில் இடி மின்னலின் போது குடையை பயன்படுத்த கூடாது. மின்னல் தாக்கத்தின் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது.  நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இயற்கை இடர்பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொது மக்களை எவ்வாறு மீட்பது பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077  ஆகியவற்றை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையொட்டி,  மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் விஜயா, தலைமையாசிரியர் ஆர்த்தி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top