Close
நவம்பர் 22, 2024 12:42 மணி

கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துளிர் வாசகர் திருவிழா..

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காட்டுநாவவில் vடைபெற்ற துளிர் வாசகர் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற   துளிர் வாசகர் திருவிழாவுக்கு   தலைமை ஆசிரியர் ராசாத்தி தலைமை வகித்தார்.

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு பேசியதாவது:தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஆண்டுதோறும் துளிர் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு மாதம்தோறும் துளிர் மாத இதழ் வழங்கப்படுகிறது.

இந்த துளிர் மாத இதழில் அறிவியல் நடப்பு நிகழ்வுகள் அறிவியல் அறிஞர்களின் கட்டுரைகள் உலக கண்டுபிடிப்பு கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் செய்திகளை மாதம்தோறும் வெளியிட்டு வருகிறது.

மாணவர்கள் துளிர் மாத இதழை தொடர்ந்து வாசிப்பது மூலம் அறிவியல் சார்ந்த தகவல்களை பெறுவதன் மூலம் அறிவியல் மனப்பான்மை வளர்த்துக் கொள்ள முடியும், மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு அறிவியல் அறிவை ஊட்டக்கூடிய வகையில் தொடர்ந்து 40 ஆண்டுக ளுக்கு மேலாக களப்பணியாற்றி வருகிறது.

தற்போது மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக மந்திரமா தந்திரமா நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.ஜந்தர் மந்தர் மாத இதழ் அறிவியல் இயக்க உறுப்பினராக சேர்வதற்கு பிறகு உள்ளிட்ட நூல்களை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அனைத்து நூல்களையும் மாணவர்கள் தொடர்ந்து வாசிப்ப தன் மூலம் வாசிப்பு பயிற்சி மேம்படுவதோடு அறிவியலில் தனித்திறமை பெற்று முன்னேற முடியும் என்றார் அவர்.

அறிவியல் இயக்கம் பல்வேறு வகையான சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி மிகப் பெரிய அறிவு தேடலுக்கு அடித்தளம் விட்டு வருகிறது என்றும் பேசினார்.

இந்நிகழ்வினை கீதா,தேவதாஸ், ஆகியோர் ஒருங்கிணைத் தனர். இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் சரண்யா, சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை அகிலாண் டேஸ்வரி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top