Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட செயல்பாடு: பெற்றோர்கள் வரவேற்பு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை பார்வையிட்ட அலுவலர்கள்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு   பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி  ஆலோசனையின் படி இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வட்டார வள மைய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப் பாளர் எஸ்.கே.சுரேஷ்குமார், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா ஆகியோர் கொத்தகம் இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்டனர்.

அப்போது, தன்னார்வலர்கள் சினேகா, மணியம்மை,முத்து லெட்சுமி ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது.
மையத்தின் செயல்பாடுகளை  ஆய்வு செய்தபின்னர் ஆலோசனை வழங்கினர்.

மழைக்காலங்களில் மையத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும் , மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும், மாணவர்களின் வருகை பதிவை ITK செயலில் பதிவேற்றம் வேண்டும் , பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.

தன்னார்வலர்களுக்கு இதுவரை ஊதியம் வரவில்லை என்றால் ITK செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்  ஆலோசனை வழங்கினார்.

தன்னார்வலர்கள் தொடுவானம் இதழை வாசிக்க வேண்டும் எனவும், தங்களுடைய படைப்புகளை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளை இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

மாணவர்கள் கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று வருவது பெற்றோர் கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top