Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

விஜயதசமி..நெல்லில் கைபிடித்து எழுதி கல்விப்பயணம் தொடங்கிய மழலையர்கள்…

புதுக்கோட்டை

விஜயதசமி நாளில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மழலையர் சேர்க்கை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது.

விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பித்தால் வெற்றியும் புகழும் கிடைக்கும்.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது  அல்லது வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா,  வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம்.

முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது.

இந்த நல்ல நாளில் நல்லநேரத்தில் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்காக பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். பெற்றோர்களையும் குழந்தைகளையும் ஆசிரியப் பெருமக்கள் வரவேற்று இனிப்புகள் வழங்கினர்.  பள்ளியின் முதல்வர் முன்னிலையில் சரஸ்வதி படத்தின் முன் குழந்தைகளை நெல்லில் எழுத வைத்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மழலையர் சேர்க்கையில் பங்கேற்றோர்

மழலைக் குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கிய பின் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும் போது: எத்தனையோ தொழில் நுட்பவளர்ச்சிகள் வந்து விட்டபின்னும் இன்னும் மரபுமாறாமல் பண்பாடு மாறாமல் இன்னும் தங்கள் குழந்தைகளின் கல்விப் பயணம் நல்ல முறையில் துவங்க நெல்லில் எழுதித் துவங்கிடவேண்டும்.

என்றும் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசிர்வாதங்களுடன் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கவேண்டும் எனபெற்றோர்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.  பள்ளியில் புதியசேர்க்கை பெற்றமழலைக் குழந்தைகள் பள்ளி ஸ்மார்ட் போர்டுவசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டனர்.

மழலைக்குழந்தைகள் பள்ளிவளாகத்தில் விளையாடிக் களித்தனர். இந்தநிகழ்வில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்கள் குழந்தைகளை வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top