Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்களுக்கு பரிசளிக்கிறார், நகர காவல்துணை கண்காணிப்பாளர் ராகவி

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கைக்குறிச்சி  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் புதுக்கோட்டை   போக்குவரத்து காவல்துறையும் இணைந்து நடத்திய போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு கல்லூரியின் செயலாளர் பி.கருப்பையா  தலைமை  வகித்தார்.

கருத்தரங்கில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு, சாலைகளில் இளைஞர்கள் சாகச வேலைகளில் ஈடுபடக்கூடாது.

புதுக்கோட்டை

சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது அதிக   வேகமாக செல்லக்கூடாது.  சாலை விபத்துகள் அனைத்தும் சிறிய தவறுகள் மற்றும் கவனக்குறைவின் காரணமாகவே நடைபெறுகின்றன வருங்கால இளைஞர் சமுதாயம் நல்ல சிந்தனை வளம் , செயல்திறன் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசுதல் , இருசக்கர வாகன Side Indicators இயக்காமல் திடீரென வாகனத்தை திருப்புதல் , Side Mirrors இல்லாமல் வாகனம் ஓட்டுதல் , சாலைகளில் தவறான திசைகளில் பயணித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது எக்காரணம் கொண்டும் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. அதேபோல 18 வயதுக்கு பூர்த்தியாகாதவர்கள் இருசக்கர , நான்கு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது.

வாகனங்களை காப்பீடு செய்வது மிக அவசியம். இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பும் முக்கியம். அதில் மனித உயிர் விலை மதிக்க முடியாதது. சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது அலட்சியம் காட்டாமல் கவனமாக வாகனங்களை ஓட்டி விபத்துகளை தவிர்ப்போம் உயிர்களைக் காப்போம் என்றார் அவர்.

புதுக்கோட்டைநிகழ்வில் புதுகை நகர காவல் துணை ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ் பேசுகையில், சாலை விபத்துகள் ஏற்பட முக்கிய காரணியான சாலை விதிமுறைகளை மீறல் குறித்தும் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் , சாலை விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்கூறினார்.

இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விளக்க கையேடும்,  சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை  மற்றும் கவிதை போட்டிகளில்  வென்ற மின்னியல் துறை மாணவர்கள் ஷர்மிளா, திருப்பதி,  அபிநயா ஆகியோருக்கு  பரிசுகளையும், சிறந்த  ஓட்டுனர்களுக்கு நற்சான்றையும் துணை கண்காணிப்பாளர் ராகவி வழங்கினார்.

புதுக்கோட்டை

இக்கருத்தரங்கில் அரசு  மருத்துவர்கோபாலகிருஷ்ணன், அனைத்துத் துறை இருபால் ஆசிரியர்கள், கல்வியல் கல்லூரி முதல்வர் இளங்கோவன், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் வரவேற்றார்.   துறைத் தலைவர்   திருமலை நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கினார். துறைத் தலைவர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு  நலப்பணித் திட்ட அலுவலர்கள்மடோனா,முருகானந்தம்,பிரபுதாசன்,கல்யாண சுந்தரம்   ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top