Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க மையத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர்கள் சங்க மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க மையத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2(TNPSC Group -2 ) இரண்டாம் நிலைத் தேர்வுக்கு(main), புதுக்கோட்டை மேலராஜவீதி, ( எண்:3743/3 A) தண்டாயுதபாணி கோயில் அருகில் அமைந்துள்ள புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க‘மையத்தில் இலவச வகுப்புகள் நடைபெறவுள்ளது.
தன்னார்வ பயிலும் வட்டம் என்பது 1995ஆம் -ஆண்டு, அப்போதைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக இருந்த சுரேஷ்குமார்  தொடங்கி வைத்தார். இதன் வாயிலாக போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில் வழங்கப்பட்ட இலவச பயிற்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் அரசு வேலை பெற்றனர். அவ்வாறு வேலைவாய்ப்பு பெற்றவர்கள் தொடங்கியது தான் இந்த  தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர்கள் சங்கம்.
2013 -ஆண்டு முதல் இச்சங்கம் போட்டித் தேர்வு எழுபவர் களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றது. இப்பயிற்சி மையத்தில் படித்து நூற்றுக்கணக் கான மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அரசு வேலை பெற்றுள்ளனர்.
தற்போது வெளிவந்துள்ள குரூப்.2 முதல்நிலைத் தேர்வில் இம்மையத்தில் பயின்று 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து மையத்தின் வாயிலாக இரண்டாம்நிலை (Main) தேர்வுக்கான இலவச வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர் இம்மையம் வாயிலாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்ற தகவலை இந்த பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சுரேஷ்குமார், சோனைக் கருப்பையா மற்றும் பேராசிரியர் சா.விஸ்வநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் விவரங்கள்அறிந்து கொள்ள 8883808004,  9585070944,  7639851221  இந்த செலிடப்பேசிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top