Close
நவம்பர் 22, 2024 12:52 காலை

மணலி அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய போக்குவரத்து

சென்னை

சென்னை மணலி அரசு துவக்கப்பள்ளிக்கு பொருள்கள் வழங்கிய போக்குவரத்து போலீஸார்

சென்னயை அடுத்த மணலி புதுநகரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டவைகளை இப்பகுதி போக்குவரத்து போலீஸார் வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.

சென்னையை அடுத்த மணலி புதுநகர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் அமர்வதற்கு போதுமான மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை இருந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த இப்பகுதி போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மலைச்சாமி, உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வம், தலைமைக் காவலர் மதன் மற்றும் சில காவலர்கள் இணைந்து சுமார் 50,000 -க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பெஞ்ச், மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளை வெள்ளிக்கிழமை வழங்கினர்.

மாணவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக போக்குவரத்து போலீஸார் மேற்கொண்ட உதவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எப்சிபாதிரேசா நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top