Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

மங்கனூர் இல்லம் தேடி கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே மங்கனூரில் நடைபெற்ற பாரதி விழா

கந்தர்வகோட்டை அருகேயுள்ள மங்கனூர் இல்லம் தேடி கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகு, கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.
வெங்கடேஸ்வரி, ந.நரசிம்மன் ஆகியோரின் ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மங்கனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாரதியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .இதில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா பங்கேற்று பேசியதாவது:

சுப்பிரமணிய பாரதி 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். இவரது இயற் பெயர் சுப்பிரமணியன்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோ டியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் என்றார் அவர்.

இதையடுத்து, மையத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கி ஆலோசனை வழங்கியதாவது.. மழைக்காலங்களில் மையத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும்.

எண்ணும், எழுத்தும் திட்டத்தில் மாணவர்களுக்கு தேர்வு வைத்து அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும், மாணவர்களின் வருகை பதிவு,அடைவு திறன் ஆகியவற்றை ஐடிகே  (ITK ) செயலில் பதிவேற்றம் வேண்டும். ,மாணவர்களில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.

தன்னார்வலர்களுக்கு இதுவரை ஊதியம் வரவில்லை என்றால் ITK செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

தங்களுடைய படைப்புகளை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழில் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளை இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்  என்றும் ஆலோசனை தெரிவித்தார்

இதைமுன்னிட்டு மாணவ,மாணவிகள் பாரதியார் பற்றி கவிதைகள் பாடல்கள் பாடினார்க‌ள். ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் திவ்யா, பவித்ரா லெட்சுமி,கனகா, அஞ்சலி, வெள்ளையம்மாள் செய்திருந்தனர். சிறப்பாசிரியர் அறிவழகன் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top