Close
நவம்பர் 22, 2024 1:08 மணி

மஞ்சபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது

மஞ்சபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் சிறந்த பள்ளிக்கான விருது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி   வழங்கினார்.

விருதினை பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராவும், கந்தர்வகோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரியும்  பெற்றுக் கொண்டனர்.

சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ள மஞ்சப்பேட்டை நடுநிலைப்பள்ளி என்பது கிராமப்புற மாணவர்கள் 200 -க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பகுதியில் படிக்கும் ஏழை, எளிய நடுத்தரமிக்க மாணவர் களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி வருவது, மாணவர்க ளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது, சுற்றுச்சூழல் மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல் ஸ்மார்ட் வகுப்பறை மூலம் மாணவர்களின் அறிவியல், கணித,சமூக அறிவியல் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகிறார்கள்.

தலைமையாசிரியரின் தொடர் முயற்சியால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரமான குடிநீர், கணினி, ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இவர் ஏற்கெனவே சிறப்பாக பணிபுரிந்து வருவதற்கு மாநில நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.

சிறந்த பள்ளிக்கான விருது பெறுவதற்கு தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் கணித ஆசிரியர் சரிதா, அறிவியல் ஆசிரியர் கணேசன், சமூக அறிவியல் ஆசிரியர் தங்கதுரை ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரும் தற்போதைய மருங்கூரணி பள்ளி தலைமையாசிரியர் துரைஅரசன், விக்டர், சபரிராஜ், பாலசுப்பிரமணியன், மகேஸ்வரி,கணினி ஆசிரியர் மேனகா, உடற்கல்வி ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ள பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பொதுமக்களும் கல்வி அலுவலர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகளும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top