Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

அக்கச்சிபட்டியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கந்தர்வகோட்டை

அக்கச்சிபட்டி பள்ளியில் நடந்த பெண் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  பெண் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி  எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் ஒன்றிய சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிபட்டியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். சமூகசேகவர் அமுதா உறுதி மொழியை வாசித்தார்.பெண் குழந்தைகள் சமூகத்தின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகள் சாதனை படைக்கின்றனர்.

பாலின சமத்துவம் பற்றியும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்தும் துறைகளிலும் சிறப்பாக பணி வருகின்றனர் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக வானவில் மன்றத்தின் சார்பில் தன்னார்வலர் தெய்வநாயகி மாணவர்களுக்கு அறிவியல் சோதனை மூலம் காற்றின் அழுத்தம்,பாய்மம், நீரியல் சுழற்சி,பெர்னாலி தத்துவம், உள்ளிட்ட அறிவியல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

மாணவர்களும் ஆர்வமுடன் பார்த்து வினாக்களுக்கு விடை அளித்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, ஆனந்தராஜ்,ரகமதுல்லா,நிவின் , செல்வி ஜாய், வெள்ளைச்சாமி ஆகியோர் செய்து இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top