Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

கந்தர்வகோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை

கந்தரவகோட்டை வட்டார வளமையத்தில் நடந்த பயிற்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள்

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவணணன் வழக்காட்டுதலின்படி கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப் பெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் பயிற்சியை தொடக்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொ) பிரகாஷ்  வரவேற்றார்.

பயிற்சியில் 15 வயது முதல் 55 வயது வரை உள்ள எழுதப் படிக்காத தெரியாதவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் கையெழுத்து எழுதுவதற்கும், தினசரி செய்தித்தாள் வாசிப்பதற்கும்.

வங்கியில் பணம் எடுத்தல், வாழ்வியலும் ஆளுமையும், பேரிடர் மேலாண்மை,சாலை பாதுகாப்பு அஞ்சலகத்தில் பணம் செலுத்தல், எண்கள் அறிவோம் சட்டங்கள் அறிவோம் என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டம், இலவச கல்வி சட்டம், போக்சோ சட்டம் பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்.

குழந்தை திருமண தடைச்சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், இளைஞர் நீதிச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், உள்ளிட்ட சட்டங்களும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம் இந்திரா காந்தி தேசிய உதவிகள் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும்.

உடல் நலம் காப்போம் என்ற தலைப்பின் கீழ் ஆரோக்கிய வாழ்வின் அவசியம் தேவைகள் குறித்தும் எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, கண்பயிற்சி, புகைப் பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும்  தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  ஆசிரியர் பயிற்றுநர் சங்கிலி முத்து, சுரேஷ்குமார், ராஜேஸ்வரி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா , சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top