பல்லவராயன்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச தேச மனித ஒருமைப்பாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன் கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.வெங்கடேஸ்வரி, ந.நரசிம்மன் ஆகியோரின் ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பல்லவராயன்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டது .இதில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா பேசியதாவது:
ஐநா பொது சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மனிதர்களிடம் உள்ள ஒற்றுமை உணர்வு அனைத்து மட்டங்களிலும் சமூக உறவுகளில் அமைதியை கொண்டு வரும்.
உலக மக்களிடையே, குறிப்பாக உலக அரங்கில் ஒற்றுமை யின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20 -ஆம் தேதி அன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் மையத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும் , மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும், எண்ணும், எழுத்தும் திட்டத்தில் மாணவர்களுக்கு தேர்வு வைத்து அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவு,அடைவு திறன் ஆகியவற்றை ITK செயலில் பதிவேற்றம் வேண்டும். மாணவர்களின் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் .
தங்களுடைய படைப்புகளை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழில் அனுப்ப வேண்டும் என்றார் அவர். ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் வெற்றிச்செல்வி, பிரியங்கா, துர்கா, பூமா ஆகியோர் செய்திருந்தனர்.