Close
நவம்பர் 22, 2024 4:21 காலை

ஈரோட்டில் 50 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு…

ஈரோடு

ஈரோடு ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஈரோடு ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு  50 ஆண்டுகளுக்குபின்  அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

ஈரோடு கொல்லம்பாளையம் அருகே ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளியில் 1971-1972 -ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாலை அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சின்னசாமி தலைமை தாங்கினார். இதில், 1971-1972 -ஆம் ஆண்டு பணியாற்றிய முன்னாள் ஆசிரியை, ஆசிரியர்களான கந்தசாமி(82), தனலட்சுமி(89), ராமதிலகம்(77), செங்கோடு(70) ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் அவர்களது பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதேபோல், முன்னாள் ஆசிரியை,ஆசிரியர்களும் பணி அனுபவம் குறித்து பேசினர். இதையடுத்து முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி முழுவதற்குமான ஒலி பெருக்கி உபகரணங்களை நிறுவி, துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ராஜகோபால், கிட்டுசாமி, பாலசந்திரன், சண்முகசுந்தரம், சேகர் உட்பட 30பேர் பங்கேற்றனர். முன்னதாக முன்னாள் மாணவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். பள்ளியின் தலைமையாசிரியை தேன்மொழி நன்றி கூறினார். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் கண்ணுசாமி, ராமமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top