Close
நவம்பர் 22, 2024 12:05 காலை

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் விநாடி வினா போட்டி

புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பெரியார் ஆயிரம் விநாடி வினா போட்டி செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

விநாடி வினாடி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் கேடயம் வழங்கும் நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, மருத்துவர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் இயக்க இணைச் செயலாளர் துரையரசன் முன்னிலை வகித்தார்.

அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா வரவேற்றார். பெரியார் ஆயிரம் வினாடி வினா ஒருங்கிணைப்பாளர் நெல்பட்டு ராமலிங்கம் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:  பெரியார் ஆயிரம் விநாடி வினா பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டு மாணவர் சமுதாயம் முன்னேற வேண்டும் எனவும், எதிர்காலத்தில் பெரியார் ஏற்படுத்திய சமூக மாற்றத்தால் தான் இன்று பெண்கள் கல்வி, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு வகையான சலுகைகளை பெறுவதற்கு காரணமாக திகழ்ந்தார்.

சமூக நீதி இட ஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகளை முழுமூச்சாக கொண்டு வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்தார். தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு நடவடிக்கைகளில் தீவிரமாய் ஈடுபட்டார். வைக்கம் போராட்டம் ஈ.வே.ரா விற்குப் புகழ் தேடித் தந்தது.

சமுதாய உயர்வு தாழ்வுகளை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கே மக்கள் பாரபட்சமாய் நடத்தப்படுவது கண்டு அவருடைய மனம் கொதித்தது. அறியாமையில் ஊறிக்கிடந்த மக்களைத் தட்டி எழுப்புவது தம்முடைய கடமை என்று உணர்ந்தார்.
சமுதாயத் தின் மூட நம்பிக்கைகளைத் தகர்க்கவும் அவர் உறுதி பூண்டார். மாணவ சமுதாயம் பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என பேசினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின் செய்திருந்தனர். நிறைவாக ஆங்கிலம் பட்டதாரி ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top