இஸ்ரோ சென்று திரும்பிய ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு உற்சாகவரவேற்பு.
இஸ்ரோ விண்வெளிமையம் மற்றும் ஹார்ட்புல்னஸ் இணைந்து நடத்திய இளம் விஞ்ஞானி விருது – 2022 போட்டியில் தமிழகஅளவில் சிறந்த கண்டுபிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் யு. ஸ்ரீஹரி இஸ்ரோ விண்வெளிமையம் அமைந்துள்ளமகேந்திரகிரிக்குச் சென்று அம்மையத்தைப் பார்வையிட்டார்.
மாணவன் ஸ்ரீஹரி இஸ்ரோ விஞ்ஞானிகளோடு கலந்து உரையாடி பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார்.
இஸ்ரோபயணம் முடித்துபள்ளிக்கு வருகை தந்த மாணவனை பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மாலையணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இளம் விஞ்ஞானி ஸ்ரீஹரி இஸ்ரோவிண்வெளிமையத்தில் விஞ்ஞானிகளோடுகலந்துரையாடியதன்பயண அனுபவத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கலந்துகொண்டுபள்ளியின் இளம் விஞ்ஞானியை வாழ்த்தி“ கல்விபணியோடு மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சியிலும் நம் பள்ளி சிறந்துவிளங்குவதற்குமாணவர் ஸ்ரீஹரியின் இஸ்ரோ பயணமே சான்று”என பெருமையோடு கூறினார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் தரும் நிகழ்வாக அமைந்தது.
.