Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

வெள்ளாளவிடுதி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆண்டு விழா

புதுக்கோட்டை

வெள்ளாளவிடுதி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆண்டு விழா கொண்டாட்டம்..

வெள்ளாளவிடுதி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆண்டு விழா மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின்படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.வெங்கடேஸ்வரி, ந.நரசிம்மன் ஆகியோரிகளின் ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கி ஒராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆண்டு விழா நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:

கொரனோ கால கற்றல் இழப்புகளை சரி செய்வதற்கு தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு கற்றல் இழப்புகளை சரி செய்யக்கூடிய சிறப்பான பணியை செய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இரண்டு லட்சம் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு பிறகு மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த மாணவர்கள் தன்னார்வலர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.

கந்தர்வகோட்டை ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா தனது வாழ்த்துரையில்,  இல்லம் தேடி கல்வித் திட்டம் மாணவர்க ளுக்கு அடிப்படை திறன்களை மேம்படுத்தி வருகிறது என்றும், மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கற்றல் பயிற்சி அளிக்க கூடிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் வெளிவரக்கூடிய தொடுவானம் இதழை வாசிக்க வேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் தன்னார்வலர்களுக்கு வானவில் மன்றம், தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர் சிறப்பாகபணியாற்றி வருகின்றார் என்றார் அவர்.

மாணவ மாணவிகளின்  ஆடல்,பாடல்  நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இல்லம் தேடி கல்வித் திட்டம் கொரோனா கால கற்றல் இழப்புகளை சரி செய்து தற்போது அடிப்படை திறன்களை யும், வாசிப்பு திறன்களையும் மனமகிழ்ச்சியுடன் கற்பதற்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஓராண்டாக மிகுந்த பயனளிப் பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஊர் பொதுமக்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தன்னார்வலர் கெளசல்யா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top