Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி

புதுக்கோட்டை

தன்னார்வலர்களுக்கு கையேடு , அடைவு அட்டை வழங்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றும்  வகையில் குறைதீர் கற்பித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன்  வழிகாட்டலில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க தன்னார்வலர்களுக்கு வட்டார வளமையத்தில் எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ் தொடங்கி வைத்து பேசியதாவது: தன்னார்வலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தன்னார்வலர்களுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம், காலை உணவு திட்டம், வானவில் மன்றம் போன்ற பணி நியமனங்களில் தன்னார்வலருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

 இல்லம் தேடிக் கல்வி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சு.கு சுரேஷ்குமார், ஒன்றிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா கருத்தாளராக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில் இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு எண்ணும், எழுத்தும் குறைதல் கற்பித்தல் பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவர்களின் அடைவு திறனை பதிவு செய்ய அறிவுறுத்தப் பட்டது.

மாணவர்களின் அடிப்படை திறன்கள் கண்டறியக்கூடிய வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தன்னார்வலர் களுக்கு கையேடு , அடைவு அட்டை வழங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி செயலியில் மாணவர்களின் அடைவு திறனை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top