Close
நவம்பர் 22, 2024 12:17 மணி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பரிசுத்திருவிழா

புதுக்கோட்டை

ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாணவர் களுக்கு 1500 பரிசுகளை வழங்கும் பரிசுத் திருவிழா

ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திறனை, ஆங்கில அறிவை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்புவிழா கொண்டாடப்பட்டது.

பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பல்வேறு பள்ளிகளின் கல்லூரிகளின் ஆங்கிலஆசிரியர்கள் நடுவர்களாக பொறுப்பேற்று குழந்தைகளின் அறிவாற்றலை கண்டும் கேட்டும் நல்ல தீர்ப்புகள் வழங்கினர்.

அதன் தொடர்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பல லட்சம் செலவில் பரிசு பொருட்கள் விலை மதிக்க முடியாத சான்றிதழ்கள் கழுத்து வலிக்கும் அளவு கனமான பதக்கங்கள்  என 1500 பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

சிறப்புவிருந்தினராக தமிழ்நாடுஅரசு ஆசிரியர் மனசுத் திட்டம்” மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி  பேசியதாவது: மாணவர்கள் திரைப்பட நடிகர்களை ஹீரோக்களாக நினைப்பதை விடுத்து தங்களின் தாய் தந்தையர்களை ஹீரோ ஹீரோயின்களாக நினைத்து போற்ற வேண்டும்.

பெற்றோர்களின் நம்பிக்கைக்குஉரியவர்களாகபிள்ளைகள் இருந்துவிட்டால் எந்தவொரு சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இலக்கினை அடையலாம். வேறு எங்கும்  இல்லாத வகையில் இந்தப் பள்ளியில் மாணவர்களுக்காக உளவியல் ஆலோசகரை நியமித்திருப்பது ஒரு முன்னுதாரணமாக அமைந்தள்ளது.

செங்கலும் சிமெண்டும் சேர்ந்து அமைந்ததெல்லாம் பள்ளிக் கூடங்கள் இல்லை. எல்லா வகையிலும் மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே யோசிக்கின்ற இந்தப் பள்ளியே தரமானபள்ளி என்றார் அவர்.

விழாவில் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவிதங்கம் மூர்த்தி,பள்ளியின் செயல் அலுவலர் காவியா மூர்த்தி, பல்வேறு ரோட்டரி அமைப்புகளைச் சேர்ந்த வேங்கடசுப்பிரம ணியன், சிவகுமார், மாருதி கே.மோகன்ராஜ், அரசுசிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார்,

கல்வியாளர்கள் வி.ராஜேந்திரன், ஜே.ரமேஷ்பாபு, மகாத்மா ரவிச்சந்திரன், என்.வேலுசாமி, வி.என்.எஸ்.செந்தில், பேராசிரியர் கருப்பையா, பள்ளியின் உளவியல் ஆலோசகர் மார்ட்டீன் ஆசிர்வாதம் மற்றும் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக அஞ்சலிதேவிதங்கம் மூர்த்தி வரவேற்க நிறைவாக பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். விழாவினை ஆசிரியர்கள் ஆனந்தி, காசாவயல் கண்ணன் தொகுத்து வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top