Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

 புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரியில் காது, மூக்கு, தொண்டை பிரிவு தொடர் கல்வி பயிலரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற காது மூக்கு தொண்டை பிரிவு தொடர் கல்வி பயிலரங்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் தொடர் கல்வி பயிலரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பாக  நடைபெற்ற தொடர் கல்வி பயிலரங்கத்துக்கு   மருத்துவக் கல்லூரி துணைமுதல்வர் மருத்துவர்  சி. உமையாள் தலைமை வகித்தார்.

கல்லூரி மருத்துவக் கல்வி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வாசுகி  முன்னிலை வகித்தார்.  இந்த பயிலரங்கில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் ரவீந்திரன் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரியின் இணை பேராசிரியர் மருத்துவர் கணேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று  காது, மூக்கு , தொண்டை சம்பந்தமான நோய்களை எவ்வாறு கண்டறிவது, எப்படி பரிசோதனை செய்வது மற்றும் நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.

புதுக்கோட்டை
புதுகை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பயிலரங்கை தொடக்கி வைத்த சிறப்பு விருந்தினருடன் கல்லூரி துணை முதல்வர் சி. உமையாள்

மருத்துவர் ராஜாகணேஷ் பேசுகையில்,  தேர்வுக்கு செல்லும் முன் மாணவர்கள் தன்னை எவ்வாறு தயார் படுத்துவது, தேர்வினை எழுதுவது பற்றி விளக்கமாக  எடுத்துக் கூறினார்.

இப்பயிலரங்கில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் பேராசிரியர் மருத்துவர் தங்கராஜ், துணை பேராசிரியர் மருத்துவர் ராஜா கணேஷ், உதவி பேராசிரியர் மருத்துவர் க.ஆறுமுகம் மற்றும் மருத்துவர்கள்  ராயப்பன் குமார், அருணகிரி,

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் காது , மூக்கு, தொண்டை பிரிவில் தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ, மாணவிகள்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். நிறைவாக உதவி பேராசிரியர் மருத்துவர் க.ஆறுமுகம்    நன்றிகூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top