ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில்ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நகைச்சுவை பேரரசு, பட்டிமன்றநடுவர் கு. ஞானசம்பந்தன் மற்றும் மாவட்டஆட்சித் தலைவர் கவிதாராமுஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன. பள்ளியின் ஆண்டு மலர் ‘விங்ஸ்”அரண்மனை ராணிகளால் பல்லக்கில் கொண்டு வரப்பட்டது மாவட்டஆட்சித் தலைவர் கவிதாராமு ஆண்டு மலரை வெளியிட, முனைவர் நகைச்சுவைபட்டி மன்ற நடுவர் கு. ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்
.விழாவில் விஜய் குழுமத் தலைவர் முருகானந்தம், மக்களிசைப் பாடகர்கள் செந்தில்கணேஷ்-ராஜலெட்சுமி ஆசியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு பேசுகையில், மழலை குழந்தைகளின் நடனங்கள் நான் மிகவும் ரசித்தேன் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வழிகாட்டியை வெளியில் எங்கும் தேடவேண்டாம் உலகில் பலருக்கும் வழிகாட்டியாக உள்ள உங்களின் பள்ளி முதல்வரையே நீங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் வாழ்வில் முன்னேறலாம் என்றார் ஆட்சியர்.
விழாவில் சிறப்புவிருந்தனர் நகைச்சுவைப் பேரரசு கு.ஞானசம்பந்தன் பேசும்போது, நான் நிறையபள்ளி விழாக்களுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால் இந்தப் பள்ளிவிழாவில் பள்ளி முதல்வர் தொடங்கி ஆசிரியப் பெருமக்களும், மாணவச் செல்வங்களும் விழாவை நேர்த்தியாக நடத்துவதில் முனைப்புக் காட்டியிருக்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கலைத்திறனை கண்டுவியக்கும் அதேநேரத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் தனித்திறன் வளர்த்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமான சூழலைஉருவாக்கித் தரவேண்டும்.
தொலைக்காட்சிப் பெட்டியையும் அணைத்துவிட்டு செல்போன்களையும் பிடுங்கிவைத்துக் கொண்டு,அப்பாவும் அம்மாவும் குடும்பத்தின் பிரச்சனைகளை ஊதிப்பெரிதாக்கி சண்டைபோட்டுக் கொண்டிருந்தால் பிள்ளைகள் படிப்பதை நிறுத்திவிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள்.
அதைத் தடுப்பதுமிகமிகஅவசியமாகிறது. அதனைகருத்தில் கொண்டு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவர்க ளுக்கென்று உளவியல் ஆலோசகரை நியமித்திருக்கிறார். ஆண்டு விழாக்கொண்டாட்டங்களில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் ரசிக்கும்படியும் நகைச்சுவை உணர்வுடனும் இருந்தது. அதேபோல கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றார் கு. ஞானசம்பந்தம்.
விழாவில் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவிதங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதாமூர்த்தி,முதன்மைசெயல் அலுவலர் காவியா மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் சுதர்சன், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல்,
எழுத்தாளர் சிகரம் சதீஷ்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசிரியர் அய்யாவு, மகாத்மா ரவி, பேராசிரியர் கருப்பையா மற்றும் மகாராணி ரோட்டரி உறுப்பினர்கள், முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் கவிஞர் பீர்முகமது, புதுகைப்புதல்வன், கீதா, தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள், புதுகைநகர பள்ளிதாளா ளர்கள், முதல்வர்கள்,பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள்.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, பவானி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள்உதயகுமார்,கணியன் செல்வராஜ், ராமன், நீலகண்டன் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளின் கண்ணைக் கவரும் வண்ண மயமான கலை நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினர்.
முன்னதாக பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். நிறைவாக துணைமுதல்வர்குமாரவேல் நன்றி கூறினார். விழாவினை ஆசிரியர்கள் காசாவயல்கண்ணன், பவானி, ஆனந்தி ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.