Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பிரைமரி பள்ளியில் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை

கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பிரைமரி பள்ளியில் நடந்த சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பிரைமரி பள்ளியில் சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது                                                                                                      புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி கல்வி மாவட்டம் கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பிரைமரி பள்ளியில் நடைபெற்ற சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு  பள்ளி தாளாளர் மேசியா சந்தோஷம்  தலைமை வகித்தார்.  தலைமை ஆசிரியர்  பானுமதி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக  பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகி   கே.டி.எஸ். காந்தி  கலந்து கொண்டு பேசுகையில்,  சுற்றுச்சூழல் சீர்கேடு உலக உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தாறும் மாசடைந்து வருகின்றது. இம்மாசுபாடுகளால் உலக உயிர்களின் வாழ்நாள் சுருங்கிக் கொண்டேயிருக்கிறது.

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை இது தடுக்கிறது. சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் மனித நடவடிக்கைகளே பெரும்பங்கு வகிக்கின்றன. மாசுபாட்டை நீக்கி நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு சுற்றுச்சூழலைச் சிறந்த முறையில் பாதுகாத்தல் அவசியம் என்பதை உணர வேண்டும்   என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், பிஎம்எஸ். அப்துல்கலீல்  200 -க்கும் மேற்பட்ட பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கி மரம்   வளர்ப்பின் அவசியம் பற்றி பேசினார்.  மாணவர்கள் சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு நாடகத்தின் மூலம் எடுத்துரைத்தனர்.

பெற்றோர்-ஆசிரியர்  கழகம் சார்பில் தேசத் தலைவர் காந்தி, நேரு, காமராஜ், அப்துல்கலாம், அன்னைதெரேசா, பகத்சிங், வஉசி உள்ளிட்ட தலைவர்களின்   உருவப்   படங்களை   பள்ளிக்கு வழங்கினார்கள்.  நிறைவாக ஆசிரியை  சூர்யா நன்றி கூறினார். பள்ளி  தலைமை ஆசிரியர்  பானுமதி  மற்றும் ஆசிரியைகள் விழாவை ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top