Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

மதுஅருந்தியிருந்தால் வாகனம் இயங்காது…! நவீனதலைக்கவசம் கண்டு பிடித்த  சண்முகநாதன் கல்லூரி மாணவர்கள்

புதுக்கோட்டை

மதுஅருந்தியிருந்தால் வாகனம் இயங்காது சண்முகநாதன்பொறியியல்கல்லூரிமாணவர்கள் நவீனதலைக்கவசம் கண்டுபிடிப்பு

மது அருந்தியிருந்தால் வாகனம் இயங்காத வகையில்  நவீனதலைக்கவசத்தை புதுக்கோட்டை சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கினால்  அந்தவாகனம் இயங்க முடியாத அளவிற்கு நவீனத்தலைக் கவசத்தை திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இன்றுபெரும்பாலானவாகனவிபத்துகளுக்கும், உயிரிழப்புக் கும் மிகமுக்கியகாரணமாக இருப்பது மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதுதான். இவற்றைத் தடுக்கும் வகையில் சண்முகநாதன் பொறியியல்கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், கார்த்திகேயன்,  சந்தோஷ் ஆகியோர் ஒன்றிணைந்து புதுவகை நவீன தலைக் கவசத்தை வடிவமத்துள்ளனர்.

இந்தநவீனத்தலைக்கவசத்தைஅணிந்திருக்கும்போதுமதுஅருந்திவிட்டுவாகனத்தை இயக்கினால் அந்தவானகம் இயங்காது. இதனால் விபத்துகளும்,  உயிரிழப்புகளும் நிகழாது.

மாணவர்களின் இந்தப் புதுக்கண்டு பிடிப்பு சென்னை. தனியார் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலானந வீனகண்டுபிடிப்பு சாதங்களுக்கான போட்டியில் இடம் பெற்றது.

இப்போட்டியில் மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன்,  கார்த்திகேயன், சந்தோஷ் ஆகியோர் ஒன்றிணைந்து வடிவமைத்துள்ள நவீன தலைக்கவசம் மாநில அளவில் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது

போட்டியில் வென்று பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பாமணிகண்டன், செயலாளர் மு.விஸ்வநாதன்,  முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு, துறைத் தலைவர் டாக்டர் ர.சொர்ணலதா மற்றும் அனைத்துப் பேராசிரியர்கள், மாணவ,  மாணவியர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top