Close
நவம்பர் 22, 2024 4:31 மணி

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படங்கள் தயார் செய்ய அறிவுறுத்தல்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம், .கத்திரிக்காடு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெற்ற ஆண்டு விழா

கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படங்கள் தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள்
வெங்கடேஸ்வரி, நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆகியோர்களின் ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றியம், கத்திரிக்காடு கிராம இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில்  கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு  பேசியதாவது:  மாணவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக சிட்டுக்களின் குறும்படம் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. குறும்படத்திற்கான தலைப்புகளாக சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகளின் பாதுகாப்பு, எனக்கு பிடித்த தலைவர், தன் சுத்தம் என்ற தலைப்பில் குறும்படங்களை தயார் செய்ய வேண்டும்.

தன்னார்வலர்கள் தங்களுடைய இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குழந்தைகளை கொண்டு உருவாக்க வேண்டும் ஒரு மையம் ஒரு குறும்படத்தை மட்டும் தயார் செய்ய வேண்டும்.குறும்படத்திற்கான கதை, கதாபாத்திரம், வசனம் மற்றும் கதை நடத்தக்கூடிய சூழல்,கால அமைப்பு ஆகியவற்றை தயார் செய்வதற்கு மாணவர்களை தன்னார்வலர்கள் ஊக்க படுத்த வேண்டும் என்றார் அவர்.

இதையொட்டி ஆடல்,பாடல், கரகாட்டம் என மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .மேலும் ஒவியம், கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக தன்னார்வலர் சத்யா வரவேற்றார்.நிறைவாக தன்னார்வலர் ஆர்த்திகா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top