தஞ்சை அமிர்தா நிலையத்தில் புத்தக கண்காட்சி தொடக்க விழா தொடங்கியது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்.ஆர் சாலையில் அமிர்தா புத்தகம் நிலையம் அமைந்துள்ளது. அமிர்தா புத்தகம் நிலையத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி பிப் 19 முதல் மார்ச் 19 வரை ஒரு மாத காலம் வரை 10% சதவீத கழிவு விலையில் விற்பனை நடைபெறுகிறது.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைச் செயலாளர் பேராசிரியர் சுகுமார் தலைமை வகித்தார். புத்தக கண்காட்சியை ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் தவமணி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
புத்தக கண்காட்சியில் முதல் விற்பனை பிரதியை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் மணவாளன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, மன்னர் சரபோஜி கல்லூரி கெளர விரிவுரையாளர் சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தஞ்சை அமிர்தா புத்தக நிலையத்தில் நீட், ஜெஇஇ, உள்ளிட்ட போட்டித் தேர்வு புத்தகங்களும், வரலாற்று தலைவர்களின் புத்தகங்களும், அறிவியல் ,சமூக அறிவியல் அரசியலமைப்புச் சட்டம், சுற்றுச்சூழல், கல்வி , சமத்துவம், பள்ளி கல்லூரிக்கு தேவையான அனைத்து புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் என பத்தாம் வகுப்பு 12 -ஆம் வகுப்பிற்கான கையேடுகள் ஸ்டேஷனரி பொருட்கள் என் சி ஆர் டி, சிபிஎஸ்இ புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான புத்தகங்களும் 10%கழிவு விலையில் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கும். முன்னதாக .நெல்லுபட்டு இராமலிங்கம் வரவேற்றார்.நிறைவாக திராவிட செல்வம் நன்றி கூறினார்.