பசுமைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒருபகுதியாக, அன்னவாசல் ஒன்றியத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.
அதன்படி, அன்னவாசல் அருகிலுள்ள எருக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் தமிழ்நாடு அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட பசுமைத் திட்டத்தின் மூலம் 28 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மேலும் , காய்கறி தோட்டம், மக்கும்உரம்தயாரிப்பு,மழைநீர் சேகரிப்பு,நெகிழிப்பை ஒழித்தல் ஆகிய வெவ்வேறு தலைப்பு களில் அப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்வில், மாணவிகளின் வழிகாட்டி ஆசிரியர் ஆயிஷா சித்திக்கா உறுதுணையாக இருந்தார். கல்லூரி மாணவிகள் மேகா, பவதாரணி ஆகியோர் தலைமையில் மாணவிகள் கீர்த்திகா, ஜாய் பிரியங்கா மோட்லி ஜேனிஸ், நித்தியா, ரஞ்சனி, ஶ்ரீகலா, ஸ்டெல்லா, தமிழினிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.