Close
செப்டம்பர் 20, 2024 3:58 காலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கந்தர்வகோட்டை தெற்கு ஆகிய மையங்களில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையில் மாணவர்களிடம் வெளிக்கொணர வேண்டிய கற்றல் விளைவுகள், மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வினா தயாரித்தல் போன்றவற்றில் விரிவாக பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி  துவங்கி வைத்துப் பேசினார், வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் பயிற்சியினை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவது குறித்தும்  வழங்கப்படும் பயிற்சி முறைகளை மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவும் ஆலோசனைகளை கூறினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் உடனிருந்தனர்.

இப்பயிற்சியில் பள்ளி ஆசிரியர்கள் தேவ ஆரோக்கியநாதன், பாத்திமா, ஜெயலெட்சுமி கனிமொழி , சரண்யா ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு விரிவாக பயிற்சியளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ்குமார், சங்கிலி முத்து , பாரதிதாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top