புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் நடத்திய வேளாண் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழ்ப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஜான்சி, ஜெயந்தி, ஜிம்சி ரேச்சல்,கமலபிரியா, கார்த்திகா,காவியா. ஜெ,காவியா. மா, கீர்த்தனா, கிருத்திகா, வெ.கிருத்திகா, க.பாரதி கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் வேளாண் அறிவியல் கருத்து கண்காட்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பட்டுப்புழுவின் வாழ்க்கை சுழற்சி , அசோலாவின் பயன்கள் , பாரம்பரிய நெல் ரகங்கள் , உயிர் உரங்கள், சிறுதானியங்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-2024 பற்றியும் சிறுதானியங்களின் பயன்கள் பற்றியும் கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.