Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

மக்கள் ஒற்றுமையே தேசத்தின் பாதுகாப்பு: எம்எல்ஏ சின்னதுரை பேச்சு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையை அடுத்த சத்தியமங்கலம் மேலூரில் உள்ள ஐஐபிஎச்எஸ் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் 52-ஆவது ஆண்டு தேசிய பாதுகாப்பு தின விழாவில் பங்கேற்ற கந்தர்வகோட்டை எம்எல்ஏ- சின்னத்துரை

சாதி, மதம் கடந்த மக்கள் ஒற்றுமையே தேசத்தின் உண்மை யான பாதுகாப்பு என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை.

புதுக்கோட்டையை அடுத்த சத்தியமங்கலம் மேலூரில் உள்ள ஐஐபிஎச்எஸ் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் 52-ஆவது ஆண்டு தேசிய பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் களை வழங்கி  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை  பேசியதாவது:

நீங்கள் படிக்கும் கல்வியானது மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் தேவையானதாகும். பேரிடர் காலங்களில் நீங்கள் ஆற்றப்போகும் பணிக்கு ஈடு இணையாக எதுவும் இருக்கப் போவதில்லை. அத்தகைய மகத்தான பணியில் சேரப்போகின்ற உங்களுக்கு அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்களாக இருப்பது அவசியம்.

சாதி, மதம், இனம் என பல்வேறு கூறுகளாக நாட்டைப் பிரித்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இத்தகைய சுயநல சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உள்ளது. சாதி, மதம் கடந்த மக்கள் ஒற்றுமையே இந்தியாவின் உண்மையான பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

விழாவிற்கு புதுக்கோட்டை தீ அணைப்பு அதிகாரி இ..பானுப்ரியா தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா அலுவலர் கே.ஜோயல் பிரபாகர், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரியின் இயக்குனர் இ.சாந்தி வரவேற்க, இணை இயக்குனர் க.முருகானந்தம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top