Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 21,731 பேர் தேர்வு எழுதுகின்றனர்

புதுக்கோட்டை

புதுகையில் திங்கள்கிழமை ராணியார் மகளிர் மேனிலைப்பள்ளியில் தொடங்கிய பிளஸ 2 தேர்வு

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 13.3.2023 தொடங்கி  3.4.2023  ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிளஸ் 2 தேர்வினை 10,690 மாணவர்கள்,  11,041 மாணவிகள் என மொத்தம் 21,731  பேர் எழுதுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பிற்கு 97 தேர்வு மையங்களும்,11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும்,2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 25 வழித்தடங்களும், தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வு மையங்களும் அமைக்கப் பட்டுள்ளன.

மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும்.

இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்க வழங்கப் படும்.  இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்தபின்னர் தேர்வு எழுத வந்த மாணவி யோகேஸ்வரி

தேர்வு நாளன்று ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்களுக்கு குடிநீர்வசதி மற்றும் சுகாதார வசதிகள் உரிய முறையில் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்கள் அமைந்துள்ள வழித்தடங்களில் தேர்வு நாளன்று பேருந்துகள் தடையில்லாமல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள குறித்து ஆய்வு செய்து முன்னேற்பாட்டு வசதிகள் செய்யப்பட் டுள்ளது.

அனைத்து வட்டார வளர்ச்சிஅலுவலர்களும் அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மை செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
ராணியார் மகளிர் மேனிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகள்

அனைத்து துறை அலுவலர்களும் அவரவர்களுக்கு கூறப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தேர்வினை சிறப்பாக நடத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று  தொடங்கும் 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,225 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணி வரை நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளதாகவும், தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும் என்றும் கூறப்பட்டுள் ளது. 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.

தமிழ் பாட தேர்வை 49,559 பேர் எழுதவில்லை..

இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு தமிழ் பாட தேர்வில் 49,559 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை.  தனித்தேர்வர்கள் 1,115 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வி துறை தகவல் தெரிவித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top