Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம்: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் திறப்பு

தஞ்சாவூர்

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளியில் மொழிகள் ஆய்வகம்: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் திறந்து வைத்தனர்

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளியில் மொழிகள் ஆய்வகம்: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கையாளும் மொழிகள் ஆய்வகங்களை நிறுவி வருகிறது.

2023- 2024 -ஆம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியை கையாளும் திறனை மேம்படுத்துவதில் இத்திட்டம் முனைப்புடன் செயல்படுகிறது.

மாநிலம் முழுவதிலும் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள மொத்தம் 89,680 செயல்படும் நிலையில் உள்ள கணினிகள் மொழிகள் ஆய்வகங்களாக செயல்படும்.

இந்த மொழிகள் ஆய்வகங்களின் வாயிலாக அரசு பள்ளி களில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு,  சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. எஸ்.ராஜகுமார்,  பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன், சீர்காழி எம்.எல்.ஏ. எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வரவேற்புரை ஆற்றினார்.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, திமுக மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க.அன்பழகன்.

தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி, குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் கு.மகேந்திரன், குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், ஏ.ஆர்.ராஜா, குமரா.வைத்திய நாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன்.

குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாமாரியப்பன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top