Close
நவம்பர் 22, 2024 7:01 காலை

படிப்பு மற்றும் தனித்திறன் வளர்ச்சிக்கும் ஏற்ற சூழலை பெற்றோர்கள் தர வேண்டும்

புதுக்கோட்டை

குளத்தூர் மகாத்மா பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பரிசளிக்கிறார், முன்னாள் துணை வேந்தர் சுப்பையா

புதுக்கோட்டை அருகே குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில். ஆண்டு விழா  கோலாகலமாக  நடைபெற்றது.
விழாவுக்கு   முன்னாள் ஊராட்சித் தலைவர்   ஒ.எஸ் பார்த்திபன்   தலைமை வகித்தார்.  பள்ளியின் தாளாளர் டி. ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள்    துணை வேந்தர் எஸ்.சுப்பையா . சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ் களும்,   மகாத்மா    பள்ளி    முன்னாள் மாணவர்கள், ஆசிரி யைகள், சுஹாசினி, சத்யா, ரம்யா, வித்யா, சண்முகப்பிரியா, புவனேஸ்வரி,கோவர்த்தினி, சுபத்திரை,கேசகவள்ளி மற்றும்    பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கினார்.
விழாவில்  அவர் பேசியதாவது:   இந்தப் பள்ளிவிழாவில் பள்ளி முதல்வர்  ஆசிரியப் பெருமக்களும், விழாவை நேர்த்தியாக நடத்துவதில் முனைப்புக் காட்டியிருக்கிறார்கள் . பெற்றோர் கள் தங்கள் குழந்தைகளின் கலைத்திறனை கண்டுவியக்கும், அதேநேரத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்துவதற்கும், தனித்திறன் வளர்த்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமான சூழலைஉருவாக்கித் தரவேண்டும். அதே போல  மாணவர்கள்   கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் முதல்வர்  கவிஞர் தங்கம்மூர்த்தி, அபிராமி  பள்ளியின் ஆலோசகர்,பேராசிரியர் கருப்பையா, ராயல் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் போஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுக்கோட்டை
பள்ளிக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தங்களது  திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் ரசிக்கும்படியும் நகைச்சுவை உணர்வுடனும் இருந்தது.குழந்தைகளின் கண்ணைக் கவரும் வண்ணமயமான யோகா மற்றும்  மழலை குழந்தைகளின் நடனங்கள் என விழா களை கட்டியது.
விழாவில் பள்ளியின் ஆலோசகர்கள் மற்றும் கம்பன் கழக செயலாளர் இரா .சம்பத்குமார்,    அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசிரியர் அய்யாவு, யோக பாண்டியன், அருட்பணி மருத்துவர் ஆர். ராமமூர்த்தி  மற்றும் பேலஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,  பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் சமூக ஆர்வலர்கள், பல்வேறு ஊராட்சி தலைவர்கள்   மாணவ , மாணவிகள்.பெற்றோர்கள்  மகாத்மா    பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள்    உள்ளிட்டோர்   கலந்து  கொண்டனர்.
விழா  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர். நிறைவாக  பள்ளியின் ஆசிரியை கேசகவள்ளி நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியை  சுபத்திரைதொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top