Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

உலக திருக்குறள் பேரவை – அம்பிகா கல்வி அறக்கட்டளை நடத்திய உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை

உலக திருக்குறள் பேரவை-அம்பிகா அறக்கட்டளை சார்பில் பொன்மாரி கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த உலக மகளிர் தின விழா

உலக திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையும், அம்பிகா கல்வி அறக்கட்டளையும் இணைந்து கொண்டாடிய உலக மகளிர் தின விழா (19.3.2023) பொம்மாடிமலை, பொன்மாரி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, பொன்மாரி மெட்ரிக் பள்ளி தாளாளரும். அம்பிகா கல்வி அறக்கட்டளை இயக்குனருமான  ம.சந்திரா ரவீந்திரன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்விற்கு, தமிழறிஞர் துரை.மதிவானன், உலகத் திருக்குறள் பேரவை செயலர் சத்தியராம் ராமுக்கண்ணு, மேனாள் ரோட்டரி ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம், உலகத் திருக்குறள் பேரவை உறுப்பினர்ப. லட்சுமணன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர்   திலகவதி செந்தில், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜெயராணி மாயகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பொன்மாரி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் தாய்களுக்கென  நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை வழங்கினர். மருத்துவர் ராம்தாஸ், வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புதுக்கோட்டை
பொன்மாரி பள்ளிக்கு டிவி- வழங்கிய மாணவர்கள் மாணவர்

குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி, பள்ளி மாணவர் ஒருவரின் தாயார் பாண்டிச்செல்வி, தற்போது பத்தாம் வகுப்பு படித்து முடித்து வெளியேறும் மாணவர்கள், தனித்தனியே பொன்மாரி பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிக் கொடுத்தது விழாவின்  சிறப்பு.

முன்னதாக பள்ளி முதல்வர் வி.ஜெயராணி  வரவேற்றார். நிறைவாக அறிவியல் ஆசிரியை செ.வித்யா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்பிகா அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் அ.ரவீந்திரன், மருத்துவர் பீட்டர், புண்ணியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமாக பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து தாய்மார்க ளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top