Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர்

புதுக்கோட்டை

புதுகை பூங்காநகர் குமாரராஜா பள்ளியில் நடந்த ஆண்டு விழா

அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்றார் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு.

புதுக்கோட்டை பூங்காநகர்  குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில்  நடந்த ஆண்டு விழாவுக்கு,பள்ளியின் தாளாளர்  பி.கருப்பையா தலைமை  வகித்தார்.தலைமை ஆசிரியை அன்னபூரணி  முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு கலந்து கொண்டு பேசியதாவது:   குழந்தைகளின்      தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை  பெற்றோர்கள் தங்கள் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மாணவர்களை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.  குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து பெற்றோர்கள்  கேட்க வேண்டும்.

பிள்ளைகளோடு அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர் களையே மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். பிள்ளைகளின் வெற்றியை உறுதி செய்வது  பெற்றோர்களின் கைகளின்தான் உள்ளது.  பள்ளியா விட்டு வீடு  வந்து சேரும்  குழந்தைகளிடம்  பெற்றோர்  கலந்துரையாட வேண்டும்.

தங்களது வேலைகளை ஒதுக்கி வைத்துதினமும் இரண்டு மணி நேரம் பாடங்களை கற்கசெய்ய வேண்டும். குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை அதிக நேரம் செல்போன்  பயன்படுத்து  ஏற்படும்  பக்க விளைவுகள் பற்றியும்  பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு தங்களது குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்த்தெடுக்க வேண்டியது  பெற்றோர்களின் தலையாய கடமை என்றார் பேராசிரியர் அய்யாவு.

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர்   க.கார்த்திக்ராஜா , பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மழலையர் மற்றும் மாணவ,மாணவிகளுக்கும் விருதுகள், நற்சான்றிதழ்களும்

புதுக்கோட்டை
பூங்காநகர் குமாரராஜா பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்

பள்ளியின்   முன்னாள் மாணவர்கள், ஆசிரியைகள் மற்றும் பணியாளர்களுக்கும் நினைவு பரிசுகளும் வழங்கி பேசினார் .

குழந்தைகளின் கண்ணைக் கவரும் யோக மற்றும்   மழலையர்   குழந்தைகளின் நடனங்கள் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக  நடைபெற்றது

விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை அன்னபூரணி , ஆலோசகர் சேகர் மற்றும் ரோட்டரி  சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மாணவ , மாணவிகள்.பெற்றோர்கள்    கலந்து  கொண்டனர்.

விழா  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர். முன்னதாக ஆசிரியை பார்கவி வரவேற்றார்.  நிறைவாக  பள்ளியின் ஆசிரியை கிரிஷாம்பாள் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top