Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

பள்ளி மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரைப் போட்டி: ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவி சிறப்பிடம்

புதுக்கோட்டை

மாவட்டஅளவில் ஆய்வுக் கட்டுரைஎழுதி மூன்றாம் பரிசுபெற்ற ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளிமாணவி .யாழினி

பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மாவட்ட அளவில் ஆய்வுக் கட்டுரை போட்டியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்தார்.

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி யாழினி மாவட்டஅளவில் ஆய்வுக் கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் மாணவர் களின் திறன்களை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்கமளித்து வருகிறார்.

அந்தவகையில், மாவட்டஅளவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய தலைப்புகளில் 100 பக்க அளவில் ஆய்வு கட்டுரை எழுதும் போட்டியை அறிவித்தார். இதில்,  500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி ரா.யாழினி, கல்வி அன்றும் இன்றும் என்ற தலைப்பில் எழுதிய ஆய்வு கட்டுரைக்கு மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார்.

புதுக்கோட்டை
கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளை வாழ்த்தும் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி

மாவட்ட அளவில் ஆய்வுக் கட்டுரையில் மூன்றாம் இடம் வென்று  பள்ளிக்கு பெருமை சேர்த்த  மாணவி யாழினியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பரிசுகள் வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தார்.

பள்ளியிலிருந்து பங்கு பெற்ற மேலும் 10 மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பள்ளி முதல்வர் பரிசுகளாக வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதையொட்டி, மாணவி ரா. யாழினியின் பெற்றோர்களுக்கும் பொன்னாடை அணிவித்து  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top