Close
செப்டம்பர் 20, 2024 6:47 காலை

உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகம் வாசித்த பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு விழிப்புணர்வு முகாம்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம்  புத்தகம் வாசிப்பு  குறித்து  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புத்தக நாளை  முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் வாசிப்பு இயக்கம் நடைபெற இருப்பதால் அதனை சிறப்பாக நடத்தும் வகையில், கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  மாணவ மாணவிகளிடம்  விழிப்புணர்வு பிரசாரம்  மேற்கொள் ளப்பட்டது.

நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவில இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா கலந்து கொண்டு பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில்  புத்தக கண்காட்சியை சிறப்பாக நடத்தியது.

அப்பொழுது மாவட்டம் முழுவதும் புதுக்கோட்டை வாசிக்கிறது  என்ற நிகழ்வு மூலம் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.  அது போல உலக புத்தக நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற இருக்கின்ற வாசிப்பு இயக்கத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.

மாணவர்களுக்கு தொடர் வாசிப்பதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு தீர்வு காணக்கூடிய வாய்ப்பு களை வாசிப்பு பயிற்சி வழங்குகிறது. தொடர்ந்து வாசித்து வந்தால் கதை கட்டுரைகள் எழுதக்கூடிய வாய்ப்புகளையும் மாணவர்கள் பெறலாம்.

பாட புத்தகத்தை தாண்டிய வாசிப்பு பழக்கத்தை மாணவர் கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தினந்தோறும் நூலகங்களுக்கு செல்லக்கூடிய பழக்க வழக்கங்களை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது பள்ளி நூலகங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் பல்வேறு தலைப்புகளில் உள்ளது அதனை மாணவர்கள் தினந்தோறும் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிக்கும் பொழுது பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படுகின்ற நூல் விமர்சனம் என்ற கல்வி இணை செயல்பாடுகளில் தாங்கள் வாசித்த புத்தகங்கள் விமர்சனம் செய்யலாம் என்றார் அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வாசித்தனர். ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி,செல்வி ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top