Close
நவம்பர் 22, 2024 11:57 காலை

கந்தர்வகோட்டையில் பள்ளியில் வானவில் மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை

வட்டார அளவி லான வானவில் மன்ற போட்டிகள் வட்டார வள மையம் கந்தர்வகோட்டை யில் நடைபெற் றது

கந்தர்வக்கோட்டையில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அறிவியல் சோதனைகள் செய்து காட்டி விளக்கமளித்தனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின்படி,  தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம் , பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல்,

பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி வினா போட்டி, வானவில் மன்றம் ஆகியவற்றிற்கான போட்டிகளை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் வட்டார வள மையம் கந்தர்வகோட்டை யில் நடைப்பெற்றது . இப்போட்டிக் கான ஏற்பாட்டினை வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, செய்திருந்தனர் .வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியினை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் ஒருங்கிணைத் தார்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், மு.முத்துக்குமார், காளியம்மாள் ஆகியோர்  நடுவர்களாக செயல்பட்டனர். இப்போட்டியில் அன்றாட வாழ்வில் ஒளி என்ற தலைப்பில் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகள் அறிவியல் சோதனைகளான ஒளி நேர்கோட்டில் செல்லுதல், ஒளிவிலகல், ஒளியின் பண்புகள், ஒளியின்நடுவர்களாக பாதையில் ஏற்படும் மாற்றங் கள் உள்ளிட்ட அறிவியல் சோதனைகள் மாணவ, மாணவிகள் செய்து காண்பித்ததுடன், ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.

இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான வானவில் போட்டியில் பங்கேற்பார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்று நர்கள் சங்கிலி முத்து,இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப் பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top