Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 53 – வது  ஆண்டு விழா 

ஈரோடு

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழா

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் 53 – வது  ஆண்டு விழா  (06.04.2023) வியாழக்கிழமை கல்லூரி வளாகத்திலுள்ள கஸ்தூரிபா கலையரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் செ.து.சந்திரசேகர் தலைமை வகித்தார்.

விழாவில், தலைமை விருந்தினராக ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி சி.சந்தோஷினி சந்திரா பங்கேற்று பேசுகையில்,

ஈரோடு
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் சி.சந்தோஷினிசந்திரா

மாணவிகள் உயர் பதவிக்கு செல்லும் குறிக்கோளுடன் தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும். உயர் பதவிக்குச் செல்ல வாய்ப்பளிக்கும் அரசுத் தேர்வில் வெற்றி பெற தங்களை முழுமையாக தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

பெண்கள் நாளைய இந்தியாவின் தலைவர்களாகவும் தங்களை தகுதிப் படுத்திக்கொள்ள தயக்கமின்றி  முன் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

விழாவை முன்னிட்டு,  பல்வேறு அறக்கட்டளையின் சார்பில்  மாணவிகளுக்கு நான்கு இலட்சம் ரூபாய்  வழங்கப்பட்டது.

முன்னதாக, முதல்வர் முனைவர் செ.கு. ஜெயந்தி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் தலைமை விருந்தினருக்கு நினைவுப் பரிசளித்து கெளரவித்தனர்.

நிகழ்வில்,  கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு திட்டவியல் துறை தலைவர் முனைவர் என்.சபிதா வரவேற்றார். நிறைவாக,  கல்லூரிப் பேரவையின் பொறுப்பாளர் மற்றும் உயிர்வேதியியல்துறைத் தலைவர் முனைவர் சி.கிருபாராணி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top