Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

அக்கச்சிப்பட்டியில் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு

கந்தர்வகோட்டை

அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்துக் குள்பட்ட அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அக்கச்சிப்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேலாண்மை குழுத் தலைவி இலக்கியா தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவி வேதநாயகி முன்னிலை வகித்தார்.  தலைமை ஆசிரியர் க.தமிழ்செல்வி வரவேற்றார்.

மருத்தவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், வார்டு உறுப்பினர் கலாராணி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி , மருத்துவ வசதிகள், அரசு வழங்க கூடிய சலுகைகள், மாணவர்களின் ஆரோக்கியம் நல வாழ்வு குறித்தும், நம்ம ஊரு பள்ளி திட்டம், இடைநிற்றல், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும்,.

ஒருங்கிணைந்த கல்வி குறித்தும், போக்குவரத்து உயர்கல்வி சட்ட குறித்து, இலக்கிய மன்றம், சிறார் மன்றம், வானவில் மன்றம் போட்டி களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது எனவும், முன் பருவ மழலையர் வகுப்புகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள்  குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சரண்யா, திவ்யா செல்வி, நிர்மலா, சத்யா, ரஞ்சிதா, மகேஸ்வரி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, செல்வி ஜாய்,  இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top