புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள நேரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 43 ஆம் ஆண்டு ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தின் முதல்வர் நடராஜன் மற்றும் ஜே, சி,ஐ புதுக்கோட்டை சென்ட்ரல் தலைவர் கஜேந்திரன், பள்ளி தலைவர் கருப்பையா மற்றும் கல்லூரி தாளாளர் கமலா கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
இதனை அடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ராமநாதன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.