Close
நவம்பர் 22, 2024 6:53 காலை

குளவாய்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா

புதுக்கோட்டை

கந்தர்வக்கோட்டை ஒன்றிய குளவாய்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குலவாய்ப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .

தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

துவார் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருப்பதி தலைமை வகித்து பேசியதாவது:  கொரோனா கால கற்றல் இடைவெளி களை போக்குவிதமாக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட இல்லம்பேடு கல்வி திட்டம் நம்முடைய குளவாய்ப்பட்டி கிராமத்தில் தன்னார்வலர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் படிக்கக்கூடிய மாணவர்களின் கற்ற இழப்புகளை சரி செய்யக்கூடிய ஒரு மிகச்சிறந்த திட்டம்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை திறன்கள் கற்றுத் தரப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வித் துறையில் தமிழக அரசால் என்னும் எழுத்தும் திட்டம் புதுமைப்பெண் திட்டம் மன்ற செயல்பாடுகள் கலை நிகழ்ச்சிகள் என கல்வித் துறையில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார் அவர்.

இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும்பொழுது இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் குளவாய் பட்டி தன்னார்வலர்களை பாராட்டி பேசினார்.

இல்லம் தேடி கல்வித்திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும் பொழுது கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பான செயல்பாடுகள் மூலம் கற்றல் இடைவெளியை சரி செய்து வருவதாகவும், பள்ளி மேலாண்மை குழு மூலம் மாதம் தோறும் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் நிகழ்வு களை பெற்றோர்கள் உடன் கலந்துரையாடி வருகிறார்கள் என்றார்.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

ஆத்தங்கரை விடுதி பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி ஊராட்சி உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை தண்ணீர் நிரப்புதல் பேச்சுப்போட்டி பாட்டுப் போட்டி ஓட்டப்பந்தயம் மியூசிக் சேர் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் சுகன்யா மாலதி மருதம்பாள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் ஜான்சன் சுந்தரம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top