கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதன படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி மாணவர் ப. லோகேஸ்வரன், அரசு உயர்நிலைப்பள்ளி வேலாடிப்பட்டி மாணவி எ.அபிசா, அரசு உயர்நிலைப்பள்ளி புதுநகர் மாணவி எம்.மகாலெட்சுமி ஆகியோர் எட்டாம் வகுப்பு மாணவர்க ளுக்கு நடத்தப்பெற்ற தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு நடைபெற்று வருகிறது.
இத் தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது.மன திறன் தேர்வு, படிப்பறிவு திறன் தேர்வு என இரண்டு வகையாக நடைபெறும். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது .
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் வரை நான்காண்டுகளுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இத்தேர்வை தமிழகத்தில் 2,22,985 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த மூவர் தேர்ச்சி பெற்று நமது ஒன்றியத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், தேர்வுக்கு பயிற்சி கொடுத்த அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் , வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் , புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை,
வேலாடிப்பட்டி தலைமை ஆசிரியர் விஜிலா ஜாய், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் பாராட்டினர்.