Close
நவம்பர் 22, 2024 11:51 காலை

ஆண்டிகுளப்பம்பட்டி தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை

ஆண்டிகுளப்பம்பட்டி தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டிகுளப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

 வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ்,பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரேமா,பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவி சிவரஞனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் ஞானசேகர் அகஸ்டின் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

ஆண்டறிக்கையில் பள்ளியின் வளர்ச்சி திட்டங்கள்  பள்ளியில் கொண்டாடப்பட்ட விழாக்களான குழந்தைகள் தினவிழா,  மாறுவேட போட்டி, ஆசிரியர் தின விழா, பரிசளிப்பு விழா, பெற்றோர் தின விழா, பெற்றோர்களுக்குக்கு விளையாட்டு போட்டி நடத்தியது.

அரசு நலத்திட்டங்களும், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதும் , சுத்தமான சுகாதாரமான வகுப்பறைகள் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருப்பதி,நீர் பாசன தலைவர் கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வெள்ளையம்மாள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் வேலாயுதம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் சண்முகம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சி சீருடை வழங்கினார்கள், மாணவ, மாணவி களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர் தேவ ஆரோக்கியநாதன் தொகுத்து வழங்கினார்.

கலை நிகழ்சிகளில் மாறு வேடத்தில் நடித்தல் இன்னிசை கச்சேரி நடனம் நாட்டியம்,குழந்தை திருமணம் பெண்கல்வி 1098 பெண்களுக்கான அரசின் கல்வி திட்டங்கள் மையமாக வைத்து விழிப்புணர்வு நாடகம், ஆங்கில உரையாடல் சிலம்பாட்டம், கோலாட்டம் நகைச்சுவை‌ பேச்சு போன்றவை  நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு  “கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற வரவேற்பு பாடலுக்கு இரண்டாம் வகுப்பு மாணவி மித்ரா இன்னிசை யுடன் பாடி விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்..

நிகழ்வுகளை தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் வேலாயுதம் தொகுத்து வழங்கினார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள்நன்கொடை‌ யாளர்கள் பள்ளி மேலண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

 ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பள்ளி மாணவர் களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும்பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்களுக்கும் சிறப்பான இரவு விருந்து அளிக்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top